மேரிலாந்து மாகாணத்திலுள்ள பால்டிமோர் நகரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை குறிவைத்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி! - shooting
வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 6 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.