தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு, நால்வர் காயம்! - இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

US club shooting
US club shooting

By

Published : Feb 16, 2020, 9:47 PM IST

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை நேரம் என்பதாலும், அதிக நடமாட்டமுள்ள பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு என்பதாலும், காவல் துறையினரால் உடனடியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ஜப்பான் கப்பலில் தொடரும் கொரோனா - 355 பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details