ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
இதுகுறித்து ஜிம்பாப்வே பிரதமர் எமர்சன் நங்காக்வா, "ஜிம்பாப்வேவின் தேசத் தந்தையும், முன்னாள் அதிபருமான தோழர் ராபர்ட் முகாபே அவர்களின் மறைவை மிக வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.
சுதந்திர போராட்டத்தின் முன்னோடியும், அனைத்து ஆப்ரிக்கர்களின் சொந்தக்காரருமான தோழர் முகாபே, நமது மக்களின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவராவார். ஜிம்பாப்வே, ஆப்ரிக்கா கண்டத்தின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை என்றும் மறக்க மாட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.