தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்ரிக்காவில் கரோனா எண்ணிக்கை அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு அச்சம் - covid 19 cases africa

ஆப்ரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரு வார காலத்தில் வேகமாக அதிகரித்துவருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் கவலைத் தெரிவித்துள்ளார்.

WHO
WHO

By

Published : Apr 18, 2020, 1:11 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பா, அமெரிக்க, ஆசிய கண்டங்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், பின்தங்கிய கண்டமான ஆப்ரிக்காவிலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை ஆப்ரிக்காவில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 20 ஆயிரத்தை தொட்டுள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் நேற்று பேசுகையில், ”கரோனா பாதிப்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் தீவிரத்தை எட்டியுள்ளது. கடந்த ஒருவார காலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும், கரோனா இறப்பு எண்ணிக்கையும் 60 விழுக்காடு உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் பரிசோதனை கருவிகள் தட்டுப்பாடால் இந்த சூழல் மேலும் மோசமடையும் அபாயம் எழுந்துள்ளது” என அச்சம் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக அல்ஜீரியாவில் 364 பேரும், எகிப்தில் 205 பேரும், மொராக்கோவில் 135 பேரும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா: உலக சுகாதார அமைப்புடன் கைகோர்த்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details