நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் நிலையத்திற்கு முன்பு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டு, தீயினை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தலைநகரமான லாகோஸில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய தீ விபத்து என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சிரியாவில் பயங்கரம்... குண்டு வெடிப்பில் 40 பேர் உயிரிழப்பு!