ஏமன்: ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கும், சவுதி ஆதரவு பெற்ற அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹவுதி குழுவின் மூத்த தலைவர் சவுதியின் வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 9 பேரை ஹவுதி குழு தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் நேற்று(செப். 19) தூக்கிலிட்டது. இதனை ஐநா சபை, அமெரிக்கா, பிரிட்டன் கண்டித்துள்ளன.
நியாயமான விசாரணை ஏதுமின்றி ஒன்பது பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் நீதித்துறை இருப்பதால், அவர்களை விமர்சிக்க மக்கள் அச்சப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளன.