தமிழ்நாடு

tamil nadu

லிபியா உள்நாட்டுப் போர் - 325 அகதிகள் பத்திரமாக இடமாற்றம்!

By

Published : Apr 25, 2019, 11:36 AM IST

வாஷிங்டன்: லிபியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளதால் முகாம்களில் உள்ள அகதிகளை ஐ.நா இடமாற்றம் செய்து வருகிறது

325அகதிகள் பத்திரமாக இடமாற்றம்

வட ஆஃப்பிரிக்கா நாடான லிபியாவில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் விளைவாக 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாஃபி பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கடாஃபியின் இறப்புக்குப் பின், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஐ.நா ஆதரவுடன், அந்நாட்டில் இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், அரசுக்கு எதிராக, கலிபா ஹஃப்டர் எனும் கிளர்ச்சியாளர்கள் படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இத்தகைய சூழலால் பதற்றம் நீடிப்பதால், திரிபோலியின் தெற்குப் பகுதியில் உள்ள முகாமில் இருந்த 325 அகதிகள் வடமேற்குப் பகுதியில் மற்றொரு முகாமில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, லிபியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details