சூடான் தலைநகர் கார்டோமில் ஷீலா செராமிக்ஸ் என்னும் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இம்மாத தொடக்கத்தில், சரக்கு இறக்குவதற்காக இந்தத் தொழிற்சாலை வந்த எரிவாயு டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.
இந்தத் தீவிபத்தில் சிக்கி, 18 இந்தியர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 பேர் காயமடைந்தனர்.
சூடான் தீவிபத்து: இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 3 பேரின் உடல்!
டெல்லி: சூடான் தீவிபத்தில் உயிரிழந்த 18 இந்தியர்களில் மூன்று பேரின் உடல் டெல்லி, சென்னைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தீவிபத்தில் உயிரிழந்த 18 இந்தியர்களுள் மூன்று பேரின் உடல்கள் டெல்லி, சென்னைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சூடான் இந்தியத் தூரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சூடானில் உள்ள இந்தியத் தூதரகம் பதிவிட்டிருந்த ட்வீட்டில், "சூடான் தலைநகர் கார்டோமில் ஷீலா செராமிக்ஸ் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூன்று இந்தியர்களின் உடல்கள் எமிராட்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் இந்தியாவுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. மொஹித் குமார் என்பவரின் உடல் தலைநகர் டெல்லிக்கும் ராமகிருஷ்ணன் ராமசாமி, ஜெயக்குமார் செல்வராஜு ஆகியோரின் உடல் சென்னைக்கும் கொண்டுவரப்பட்டது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : என் மீதான பதவி நீக்க தீர்மானம் அரசியல் தற்கொலைக்குச் சமம் - அதிபர் ட்ரம்ப்