ரியோ டி ஜெனிரோ (பிரேசில்):பாலியல் புகார்களின்பேரில் தேடப்பட்டுவந்த நபரின் வீட்டில், பழங்கால அசல் நாஜி சீருடைகள், பதக்கங்கள், ஆயுதங்கள், பிரேம் செய்து பொருத்தப்பட்டிருந்த ஹிட்லரின் புகைப்படங்கள் ஆகியவற்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத அந்நபர் மீது அவரது அண்டை வீட்டினரிடமிருந்து பல்வேறு பாலியல் புகார்கள் வந்த நிலையில், காவல் துறையினர் அந்நபரை கடந்த சில நாள்களாகக் கண்காணித்துவந்துள்ளனர். இந்நிலையில், தேடுதல் உத்தரவைப் பெற்று அந்நபரின் வீட்டில் நுழைந்து கைதுசெய்ய முயன்றபோது இப்பொருள்களைக் காவல் துறையினர் கண்டறிந்தனர்.