தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ரவான்டாவுக்கு கொரோனாவை கொண்டு சேர்த்த இந்தியர் - Rawanda corona virus suspect

ஆப்பிரிக்க நாடான ராவன்டாவில் இந்தியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Rawanda
Rawanda

By

Published : Mar 14, 2020, 6:38 PM IST

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது உச்சத்தில் உள்ளது. சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்குப் பரவிய இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை மையம் கொண்டுள்ளது.

கடந்த மாதம் வரை சீனாவை மட்டுமே பெருமளவு பாதித்த இந்நோய் மார்ச் மாத தொடக்கத்தில் தென் கொரியா, ஈரானில் பரவத் தொடங்கி தற்போது, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றையும் முடங்கச் செய்துள்ளது. இதன் தாக்கம் தற்போது வரை ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அங்கும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆப்பிரிக்க நாட்டிற்குச் சென்ற இந்தியர் கொரோனா வைரஸை கொண்டு சேர்த்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான ரவான்டாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், அந்நோய் பாதிக்கப்பட்ட நபர் இந்தியர் எனவும் உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 8ஆம் தேதி மும்பையிலிருந்து சென்ற இந்தியருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட பல்வேறு நபர்கள் மூலம் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியர் ஒருவர் வெளிநாட்டிற்கு கொரோனாவை கொண்டு சேர்த்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க:கொரோனாவுக்காக மோடியின் அழைப்பை ஏற்ற பாகிஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details