தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுபான கடைகள் கடந்த 46 நாள்களாக மூடப்பட்டுள்ள காரணத்தினால், மக்கள் ஆல்கஹால் போதைக்காக புதிய வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன்படி, அன்னாசிப் பழம், சர்க்கரை, ஈஸ்ட் (yeast) ஆகியவற்றின் கலவையில் தயாரித்த பானத்தில் ஆல்கஹால் கிக் கிடைப்பதாக உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.
இதனால், அந்நாட்டில் தினந்தோறும் 10 ஆயிரம் அன்னாசிப் பழங்கள் விற்பனையான நிலையில், தற்போது லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. அன்னாசிப் பழம் விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, விற்பனை விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.