தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மலைப்பாம்புக்கு உணவளித்து கொடுமைப்படுத்திய விநோதம்!

ஆப்பிரிக்கா: மலைப்பாம்பை வனப்பகுதியிலிருந்து கடத்தி சாப்பாடு அளித்துத் துன்புறுத்திய விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

10 அடி மலைப்பாம்பை

By

Published : Sep 20, 2019, 4:00 PM IST

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் வடமேற்கு பகுதியில் காசாலா காடு அமைந்துள்ளது. அந்த காடினை சுற்றி பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். சிறிது நாட்களுக்கு முன்பு பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக காட்டு பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அருகே ஒரு சில மக்கள் பூஜை செய்வதை அப்பகுதி பழங்குடி மக்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்தபோது, அந்த மலைப்பாம்பிற்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும், விரும்பிய உணவை அளித்தால் கேட்டது நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வனப்பகுதிக்குள் நுழைந்த பழங்குடி மக்கள் மலைப்பாம்பைச் சுற்றிவளைத்து லாவகமாகப் பிடித்த வைத்தனர்.

பின்னர் மலைப்பாம்பிற்கு ஆடு,கோழி என அதிகமான உணவுகளை அளித்துள்ளனர். மலைப்பாம்பானது அளவுக்கு அதிகமாக சாப்பிட முடியாமல் திணறியது. எனினும் பழங்குடி மக்கள் விடாமல் அந்த பாம்பை கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் காட்டுக்குள் வழக்கத்திற்கு மாறாக அதிகமான பொதுமக்கள் செல்வதைக் கண்டு சந்தேகம் அடைந்து இயற்கை மற்றும் சுற்றுலா அமைச்சரிடம் அவ்வழியே சென்ற வனத்துறையினர்புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிகாரிகள் வனப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடமிருந்து மலைப்பாம்பினை காப்பாற்றி உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: 118 வருடங்களாக அணையாமல் ஒளிரும் மின் விளக்கு... அறிவியல் அதிசயம்

ABOUT THE AUTHOR

...view details