உலகெங்கிலும் கரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் இருக்கும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மருந்துகளைப் பெருவதில் பெரும் சிக்கல் நிலவியுள்ளது. 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
டனிசோ பிரி என்ற பெண் தனது கணவருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதாகவும் இப்போது நிலவிவரும் இந்த அசாதாரணமான சூழலில் தங்களுக்குப் போக்குவரத்துதான் பெரும் சிக்கல் என்று தெரிவித்தார்.