கேப் டவுன்:தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை ஒமைக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இப்படிபட்ட சூழலில், தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகளிடையே ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறார்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்று அறிவித்துள்ளது. இந்தத் தொற்று பரவினால் உயிரிழப்பு முன்பைவிட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்தத் தொற்று பரவியுள்ளதால் பெற்றோர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு விரைவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!