தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நைஜரின் முன்னாள் குடியரசுத் தலைவர் மமடோ டாண்ட்ஜா காலமானார்! - தற்போதைய குடியரசு தலைவர் இஸ்ஸோபோ மஹமடோ

நியாமி : நைஜர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மமடோ டாண்ட்ஜா தனது 82ஆவது வயதில் காலமானார்.

மமடோ டாண்ட்ஜா
மமடோ டாண்ட்ஜா

By

Published : Nov 25, 2020, 6:40 PM IST

நைஜர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான மமடோ டாண்ட்ஜா (82) காலமானார். இந்த செய்தியை தற்போதைய குடியரசுத் தலைவர் இஸ்ஸோபோ மஹமடோ தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இறப்பிற்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், மூன்று நாள்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

மமடோ டாண்ட்ஜா இரண்டு முறை நைஜரின் குடியரசுத் தலைவராக பதவி வகித்துள்ளார். இவர் தனது பதவிக் காலத்திற்குப் பிறகும் அதிகாரத்தில் இருந்திட 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு முயன்றபோது, ராணுவக் கலவரத்தில் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நைஜரில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பாக டாண்ட்ஜா காலமாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details