தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 330 நைஜீரியா மாணவர்கள் விடுவிப்பு - நைஜீரியா மாணவர்கள் கடத்தல்

போக்கோ ஹராம் அமைப்பால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டனர்.

Nigeria
Nigeria

By

Published : Dec 21, 2020, 2:39 PM IST

நைஜீரியாவில் டிசம்பர் 11ஆம் தேதி அன்று அரசுப் பள்ளி மாணவர்கள் 333 பேர் மாயமாகினர். இவர்களை, வடமேற்கு நைஜீரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய கிளையான போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு கடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டது.

கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் தீவிரம் காட்டிவந்த நிலையில், தற்போது மாணவர்கள் அனைவரையும் போக்கோ ஹராம் விடுவித்துள்ளது. அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே மாணவர்கள் எந்தவித பாதிப்புமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி சந்தித்தார். மாணவர்கள் இதுபோன்ற அசம்பாவிதங்கள் காரணமாக மன உறுதியை இழக்கக் கூடாது என அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்தார் அதிபர் புஹாரி.

இதையும் படிங்க:நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - 2021 ஏப்ரல் மாதம் தேர்தல்

ABOUT THE AUTHOR

...view details