தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நைஜீரியா பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள்: 400 மாணவர்கள் கடத்தல்? - Nigerian authorities fear 400 children kidnapped

அபுஜா: நைஜீரியா பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகள், கிட்டத்தட்ட 400 மாணவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியா
நைஜீரியா

By

Published : Dec 14, 2020, 6:41 AM IST

நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில், சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11), கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் சிலர், பள்ளிக்குள் திடீரென நுழைந்தனர்.

இதனால், பயந்த மாணவர்கள் சிலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பள்ளியிலிருந்து தப்பி வெளியே ஓடினர். சிலர், அங்கிருந்த புதர்களில் மறைந்துகொண்டனர். இரவு முழுவதும் அங்கேயே பதுங்கியிருந்த மாணவர்கள் சூரிய உதயத்துக்குப் பின் வீடுகளுக்குத் திரும்பினர். கிட்டத்தட்ட 406 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பாத மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. காவல் துறையினர், ராணுவ வீரர்கள் இணைந்து பள்ளிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மாயமான மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு, நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2014இல் பயங்கரவாதிகளால் 276 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் சுமார் 100 மாணவர்களின் நிலை குறித்து தற்போதுவரை தகவல் இல்லை. நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details