தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவைத் தடுக்க நைஜீரியாவில் நடக்கும் கொடூரம்

நைஜீரியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைவிட தடுப்பு நடவடிக்கைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.

By

Published : Apr 17, 2020, 12:17 PM IST

Updated : Apr 17, 2020, 12:44 PM IST

nigeria
nigeria

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னேறிய நாடுகளாகக் கருதப்படும் மேற்கத்திய நாடுகளே திணறிவரும் நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஆப்ரிக்க நாடுகள் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்வதில் கடும் சவால்களை சந்தித்துவருகின்றன.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பு பின்தங்கி உள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கையிலேயே அந்நாடு தீவிர கவனத்தை செலுத்திவருகிறது.

இதன் காரணமாக, அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, கரோனா உயிரிழப்பைவிட அதிகமாகியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நைஜீரியாவில் இதுவரை கரோனாவால் 400 பேர் பாதிக்கப்பட்டும், 12 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதேவேளை, கரோனா ஊரடங்கை ஒழுங்காக பின்பற்றாத 18 பேருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் இந்தக் கொடூர செயல்பாட்டை தடுக்க மனித உரிமை ஆணையம் உலக நாடுகளுக்கு அழுத்தம் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா கண்டத்தை கடந்து விரைவில் அமெரிக்கா திறக்கப்படும்: ட்ரம்ப் உறுதி

Last Updated : Apr 17, 2020, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details