அல்ஜீரியா அதிபரான அப்தெல்மட்ஜித் டெபவுன் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றதாகத் தகவல் வெளியாகியது.
அவர் ஜெர்மன் சென்றதாகக் கூறி ஆறு மாதகாலம் ஆன நிலையில், அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து அந்நாட்டு மக்கள் அழுத்தம் தரவே, அவர் விரைவில் நாடு திரும்புவார் என அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.