கென்யா நாட்டின் எவாசோ நைரோ நதியில் முதலை நடமாட்டம் அதிகளவில் காணப்படும். அவற்றை கண்டுகொள்ளாமல் அந்த நதியில் உயிரைப் பயணம் வைத்து சிங்கம் தனது மூன்று குட்டிகளைப் பாதுக்காப்பு நதியின் கரைக்கு கூட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ளது.
அந்த வீடியோவில், சிங்கம் தனது குட்டிளை நீரில் அழைத்துச் செல்லும்போது, நீரின் ஓட்டம் அதிகமாகக் காணப்படும். அப்போது, ஒரு குட்டி திடீரென்று நீருக்குள் முழுசாக மறைந்துவிடும். உடனடியாக, சிங்கம் தனது வாயால் நீரிலிருந்து குட்டியை தூக்கி நிச்சலடிக்கச் செய்யும். அதேசமயம், மற்ற குட்டிகளையும் பாதுகாப்பாக கரையின் மறுபக்கத்திற்கு கொண்டு செல்லும். இந்த அற்புதமான வீடியோவை வனவிலங்கு புகைப்படக் கலைஞரான 'லூகா பிராக்காலி' தனது கேமராவில் படம்பிடித்தார்.