தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இறந்து கரை ஒதுங்கிய 150க்கும் அதிகமான டால்பின்கள் - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! - 150 dolphins died at cape verde beach

கேப் வெர்டெ கடல் பகுதியில் 130க்கும் அதிகமான டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டால்பின்

By

Published : Sep 30, 2019, 6:43 PM IST

உலகில் நம் கற்பனைக்கும் எட்டாத விஷயங்கள் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஜீரணிக்கவே நமக்குப் பல மாதங்கள் ஆகிவருகின்றன. அவ்வாறு ஆப்பிரிக்காவில் நடந்துள்ள விநோத சம்பவம் நம்மை அச்சம் அடைய செய்கிறது.

கேப் வெர்டெ கடற்பகுதியில் உள்ள போ-விஸ்டா தீவில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்பு ஒன்று அல்லது இரண்டு டால்பின்கள் இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். ஆனால் தற்போது 150க்கும் அதிகமான டால்பின்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியுள்ளது. அதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சில டால்பின்களை மக்கள் கடலுக்குள் திரும்பி அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் டால்பின்கள் மீண்டும் கரைக்குத் தான் ஒதுங்கியது.

டால்பின்களை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயற்சி செய்த மக்கள்

இந்நிலையில் கடல் பகுதியில் ஒதுங்கிய 50 டால்பின்களை ஆராய்ச்சிக்காக அலுவலர்கள் எடுத்துச் சென்றனர். பின்பு கடற்பகுதியில் ஒதுங்கிய மற்ற டால்பின்களை அலுவலர்கள் புல்டோசர்களைப் பயன்படுத்தி மண்ணுக்குள் புதைத்தனர்.

இந்த சம்பவத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், " இறந்த டால்பின்களை உடற்கூறாய்வு செய்த பிறகே உண்மையான காரணம் தெரியக்கூடும். ஆனால் சில தருணங்கள் உடல் நலக்குறைபாடு, பாதை மாறுதல், டால்பின்களுக்குள் ஏற்பட்ட மோதல், வானிலை மாற்றம் என பல்வேறு காரணங்களால் இறந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ’உலகம் அழியப்போகிறதற்கு ஆரம்பமா’ " எனக் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒட்டகத்தைக் கடித்த பெண்...எவ்வளவோ கோவம் இருந்தாலும் ஒட்டகத்தை அங்கயா கடிப்ப!

ABOUT THE AUTHOR

...view details