மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள எக்குவடோரியல் கினியா நாட்டில் உள்ள ராணுவ முகாம், அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நேற்று( மார்ச்.7) மாலை குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர், 600 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டி பிரதமர் தியோடோரோ ஒபியாங் நுயெமா கூறுகையில், "கினியா நாட்டின் மொன்டோங் குவாண்டோமாவின் அருகிலுள்ள ராணுவ முகாமில் நேற்று மாலை 4 மணியளவில் ராணுவ வீரர்கள் டைனமைட்டை கையாண்ட போது தவறுதலாக வெடிவிபத்து ஏற்பட்டது. அதனால் ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். அத்துடன் அருகாமை குடியிருப்புகளிலிருந்த 600 பேர் படுகாயமடைந்தனர்" எனத் தெரிவித்தார்.