தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கடத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்: தீவிரவாதிகளை விடுவிக்க மாலி அரசு திட்டம் - முன்னாள் நிதியமைச்சர் சவுமைலா சிஸ்ஸியை

பமாகோ: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கடத்தியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் விதமாக 108 தீவிரவாதிகளை விடுவிக்க மாலி அரசு திட்டமிட்டுள்ளது.

Mali releases
Mali releases

By

Published : Oct 5, 2020, 9:47 PM IST

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்களை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கடத்தியது. குறிப்பாக, அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் சவுமைலா சிஸ்ஸியை அந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கடந்த மார்ச் மாதம் கடத்தியது.

கடத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை மீட்கும் வகையில் சிறையிலுள்ள தீவிரவாதிகளை விடுவிக்க மாலி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 180 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவித்து நாட்டின் வடக்குப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.

முன்னதாக அக்டோபர் நான்காம் தேதி 70 தீவிரவாதிகளையும் அக்டோபர் மூன்றாம் தேதி 110 தீவிரவாதிகளையும் அரசு விடுவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் இருந்த ஜனநாயக அரசை அகற்றி அந்நாட்டு ராணுவம் ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் எதிர்க்கட்சித் தலைவர்களை மீட்கும் முயற்சியில் சுணக்கம் ஏற்பட்டது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிஸ்ஸி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அவரின் காவலர்களை கொன்று சிஸ்ஸியை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு கடத்திச் சென்றது.

நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு வலுவாக இருந்தது. பிரான்ஸ் நாட்டின் ராணுவம் 2013ஆம் ஆண்டு தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாத அமைப்பை கலைத்தது. இருப்பினும், தீவிரவாதிகள் மீண்டும் இணைந்து தீவிரவாத அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க:பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வளைகுடா நாடுகள் - துருக்கி அதிபர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details