தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அகதிகள் மீது தாக்குதல்: 60 பேர் பலி? - தஜோரா அகதிகள் வகை முகாம்

திரிபோலி: லிபியா தலைநகர் திரிபோலி அருகே உள்ள முகாமில் தங்கியிருந்த அகதிகள் மீது காவலாளிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக, ஐநா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

airstrike

By

Published : Jul 5, 2019, 9:40 AM IST

Updated : Jul 6, 2019, 7:07 AM IST

வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியா-வை ஆட்சி செய்த சர்வாதிகாரி கடாபி 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதிலிருந்து வன்முறை, பிரிவினைகள் என நாடே சுக்கு நூறாய் உடைந்துக் கிடக்கிறது. அந்நாட்டில் ஐநா ஆதரவு பெற்ற 'கவர்மெண்ட் நேஷ்னல் அக்கார்ட்' (Government of National Accord ) இடைக்கால அரசுக்கு எதிராக, ராணுவ அதிகாரி கலிஃபா ஹிஃப்தர் தலைமையிலான படையினர், கடந்த ஏப்ரல் மாதம் முதல், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் திரிபோலி அருகே தஜோடா அகதிகள்முகாம் மீது கலிஃபாவின் படையினர், கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில், 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற அகதிகள் சிலரை அங்கிருந்த காவலாளிகள் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்கியதில் 60 பேர் பலியானதாகவும், மேலும் 77 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்த முகாம் காவலாளில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jul 6, 2019, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details