மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில், மசூதியுடன் இணைந்த கட்டடம் ஒன்றில் இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில் தீ! - 28 மாணவர்கள் உள்பட 30 பேர் பலி! - 28 students dead
மொன்ரோவியா: லைபீரியா நாட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று பள்ளியின் விடுதியில் மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 28 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போரடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.