தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தீவிரவாதி வீடியோவில் தெரிந்த கடத்தப்பட்ட இத்தாலிய பாதிரியார்! - Italian priest kidnapped in Niger shown in jihadist video

நியாமி: இத்தாலியில் கடத்தப்பட்ட பாதிரியாரை ஜிஹாதிஸ்ட் காணொலியில் பார்த்துள்ளாக ஏர் இன்போ செய்தித்தாள் நிறுவனத்தில் வெளியிட்டுள்ளனர்.

dsd
dsd

By

Published : Apr 7, 2020, 4:24 PM IST

Updated : Apr 7, 2020, 8:23 PM IST

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் , புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு கிராமமான பமோங்காவில் இத்தாலியை சேர்ந்த பாதிரியாரை மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றனர். இச்சம்பவம் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காவல் துறையும் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

இந்நிலையில், அந்த இத்தாலிய பாதிரியாரை ஜிஹாதிஸ்ட் காணொலியில் பார்த்துள்ளதாக பிரபல பத்திரிகை நிறுவனம் ஏர் இன்போ வெளியிட்டுள்ளது. அவர்கள், 23 விநாடிகள் கொண்ட காணொலியை வெளியிடாமல், புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டுள்ளனர். அதில், இத்தாலிய பாதிரியார் பியர் லூய்கி மக்கல்லி, சாம்பல் நிற உடை அணிந்தும், நீண்ட வெள்ளை நிறத் தாடியுடன் இருக்கும் காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அச்சிட்டுள்ளனர்.

இதுகுறித்து நைஜரில் உள்ள கத்தோலிக்க பணிக்கான தகவல் தொடர்பு அலுவலர் தாமஸ் கோட்ஜோவி கூறுகையில், " லூய்கி உயிருடன் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. புகைப்படத்தை பார்க்கும்போது லூய்கி மாதிரிதான் தெரிகிறது என உறுதிப்படுத்தியுள்ளோம். இதுவரை அந்த வீடியோவை நாங்கள் பார்க்கவில்லை. இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:கோவிட்-19 அச்சுறுத்தல்: உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்

Last Updated : Apr 7, 2020, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details