சோமாலியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்கா ஆப்பிரிக்கா கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி அப்துல் ஹக்கிம் தஹுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜெனரல் கிரேக் ஒல்சன், " சோமாலிய படையுடன் இணைந்து அல்-ஷாபாப், ஐஎஸ்ஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது " என தெரிவித்தார்.
சோமாலியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைமை நிர்வாகி பலி! - சோமாலியா
மொகடிஷீ: சோமாலியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமை நிர்வாகி கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐஎஸ் தலைமை நிர்வாகி கொலை
இந்நிலையில், சோமாலியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் 150 பேர் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.