நைஜீரியாவிலுள்ள கொடுங்கா என்ற கிராமத்தில் மூன்று இடங்களில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் காயமாகியுள்ளனர்.
நைஜீரியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 30 பேர் பலி! - bomb blast
அபுஜா: நைஜீரியாவில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
தற்கொலைப்படைத் தாக்குதல்
இரு பெண்கள் உட்பட நான்கு நபர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் கொடுங்காவில் உள்ள திரையரங்கிலும் கால்பந்து மைதானத்திற்கு வெளியேயும் நிகழ்ந்துள்ளன.
முதலில் 17 பேர் பலியானதாக தகவல் வெளியானது, பின்னர் அந்த எண்ணிக்கையானது 30 ஆக அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.