லிபியாவில் இரும்பு வெல்டிங் பணிக்காக ராஜேந்திர பிளேஸில் அமைந்துள்ள என்.டி. எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பாக ஏழு இந்தியர்கள் ஒரு வருடம் முன்னர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று, ஏழு பேரும் இந்தியா வருவதற்காக விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, அனைவரையும் கடத்தி சென்றுள்ளது.
இச்செய்தியை அறிந்த அவர்களின் உறவினர்கள் பிரசாத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக மத்திய அரசு லிபிய அரசாங்கத்துடன் பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.