நைஜீரியா அருகே கினியா வளைகுடாவில் கடந்த செவ்வாய்க் கிழமை ஹாங்காங்கைச் சேர்ந்த கப்பல் ஒன்றைக் கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்துள்ளனர். அதில் இருந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து இந்தியத் தூதரகம் நைஜீரியா அரசுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'VLCC, Nave Constellation' என பெயரிடப்பட்ட அந்த கப்பலை டிசம்பர் 3ஆம் தேதி இரவு 7:20 மணிக்கு கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும், தொடர்ந்து அந்த கப்பலில் ஏறி அதிலிருந்து 19 மாலுமிகளைக் கடத்திக்கொண்டு தப்பிச் சென்றதாகவும், ஏஆர்எஸ் மரிடைம் தெரிவித்துள்ளது.
கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஹாங்காங் கப்பல் தற்போது நைஜீரிய கடற்படையினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து, கடத்தப்பட்டவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!