சர்வதேச நாடுகள் பல தற்போது கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகிவரும் நிலையில், ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள பல பின்தங்கிய நாடுகளில் இன்னும் பெருந்தொற்றை எதிர்கொள்ள அடிப்படை தேவைகளே சென்று சேரவில்லை.
குறிப்பாக ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சோமாலியா நாட்டில் இதுவரை மொத்தம் 27 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் குறைவாகும்.
அந்நாட்டின் புள்ளிவிவரப்படி, இதுவரை 4 ஆயிரத்து 800 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 130 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட எந்த விதிமுறைகளும் மக்களுக்கு சென்று சேரவில்லை.
இதன்காரணமாக அங்கு மக்களின் அறியாமைக் காரணமாக நோய் ஊடுருவி பெரும் பாதிப்பை விளைவிக்குமோ என்று நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த சூழலில் அந்நாட்டு மக்களிடம் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதும் மிகப்பெரிய சவால் என நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் அந்நாட்டின் 80 விழுக்காடு மக்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது நிம்மதி தரும் அம்சம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் கைது