இடாய் புயல் காரணமாக ஜிம்பாப்வேயில் வரலாறு காணத அளவில் மழை பெய்துவருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் புயல்... 100க்கும் மேற்பட்டோர் சாவு? - ஹராரே
ஹராரே: ஜிம்பாப்வேயில் ஏற்பட்டிருக்கும் இடாய் புயலால் அங்கு வரலாறு காணாத மழை பெய்துவருகிறது, இதில் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று அதிபர் ஃபிலிப்பி யூசி (Filipe Nyusi) பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் கூறுகையில், இதுவரை இந்த புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டள்ள தகவலில் இடாய் புயலால் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.