லிபியாவில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் விளைவாக 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாஃபி பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
லிபியா அரசை அச்சுறுத்தும் ஹஃப்தார் கிளர்ச்சிப்படை! - headquarters
திரிபோலி: லிபியாவில் ஐ.நா ஆதரவு பெற்ற அரசின் தலைமையகத்தை குறிவைத்து கலிபா ஹஃப்தார் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரசு தலையகம் மீது தாக்குதல்
இதனையடுத்து அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடாஃபியின் இறப்புக்குப் பின், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஐ.நா ஆதரவுடன், அந்நாட்டில் இடைக்கால பேரவையின் கீழ் ஆட்சி அமைந்தது. இதற்கு எதிராக கலிபா ஹஃப்டர் எனும் கிளர்ச்சியாளர்கள் படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், அரசு தலைமையகம் மீது ஹஃப்தார் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.