எகிப்து நாட்டில் கரோனா வைரஸ் காரணமாக 650க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41 பேர் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்து மற்ற ஆப்ரிக்க நாடுகளைப் போல் அல்லாது நாகரீக கலசார பின்புலம் கொண்டதாகும். எகிப்திய நாகரீகத்தின் உச்சமாக கருதப்படும் பிரமிடு உலக அதிசயங்களில் ஒன்று.
இதை காண்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் எகிப்துக்கு வரும் நிலையில் கரோனா காரணமாக பிரமிடு மூடப்பட்டு பர்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பிரமிடு முழுவதும் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கரோனா குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கிஸா பகுதியில் உள்ள பிரமிடில் "வீட்டில் இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்” என்ற கரோனா விழப்புணர்வு வாசகம் வண்ண விளக்குகள் எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
எகிப்து நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க இரண்டு வாரத்திற்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரமிடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 15ஆம் தேதிவரை சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவைப் போல் இங்கிலாந்திலும் 'கரோனா கைத்தட்டு'