கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானம் சில நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளானது. இதில், 157 பேர் உயிரிழந்தனர்.
எத்தியோப்பிய விபத்து எதிரொலி: போயிங் 737 வகை விமானத்துக்கு 50 நாடுகள் தடை! - விமானத் தடை
எத்தியோப்பியா விமான விபத்தைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை 50 நாடுகள் தற்காலிகமாக தடைசெய்துள்ளன.
Boeing737_Max8
சமீபகாலமாக இதே ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருவதால்,
அதன் பாதுகாப்பு கேள்விக் குறியானது. இதன் காரணமாக இந்தியா, சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசிய, தென்கொரிய உள்ளிட்ட 50 நாடுகள் அவற்றின் போக்குவரத்தை தங்கள் நாடுகளில் தற்காலிகமாக ரத்துசெய்துள்ளன.
இதற்கிடையே, விபத்துக்குள்ளான போய்ங் விமானத்தின் பிளாக் பார்க் (Black Box) ஆய்வுக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. ஆய்வையடுத்து, விபத்துக்கான காரணம் கண்டறியப்படும்.