லிபியாவில் நீண்ட நாட்களாக பதவி வகித்து வந்த அதிபர் கடாபியின் ஆட்சி 2011 ஆம் ஆண்டு மக்களின் கிளர்ச்சியால் கவிழ்க்கப்பட்டது. அது முதற்கொண்டே பல ராணுவக் குழுகளுக்கிடையே அதிகார மோதல்கள் நடைபெற்று வருகிறது.
லிபியா துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலி
திரிபோலி: லிபியாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியானதாகவும் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா அமெரிக்கா போன்ற பல நாடுகளும் அந்நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐ.நாவும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜெனரல் கலீஃபா ஹஃவ்தரின் படைகளுக்கும், பிரதமர் ஃபயேஸ் அல் சராஜின் படைகளுக்கும் நேற்று திடீரென துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் ஃபயேஸ் அல் சராஜ் கூறுகையில், ஜெனரல் கலீஃபா ராணுவத்தின் மூலம் அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.