எத்தியோப்பிய நாட்டின் பிரதமராக இருப்பவர், அபி அஹமது அலி. எத்தியோப்பியா - எரித்தியா நாடுகளுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பிரச்னை நிலவி வந்தது. இந்த பிரச்னையை அமைதியான முறையில் முடித்து வைத்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் மொத்தம் 301 பேர் இருந்தனர். இந்த நிலையில் அபி அஹமதுவுக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. எத்தியோப்பிய நாட்டில் இவர் ஏற்படுத்திய சீர்திருத்தம் காரணமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளும் சுமூகமான முறையில் எல்லைப் பிரச்னையை தீர்த்துக் கொண்டனர்.