தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2019, 3:03 PM IST

ETV Bharat / international

எகிப்தில் 2030 வரை அதிபராக அல்-சிசி நீடிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் மீதான வாக்கெடுப்பு!

கெய்ரோ: எகிப்து அதிபர் அல்-சிசி 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்கு வழிவகை செய்யும் சட்டதிருத்தம் குறித்து கருத்து கேட்கும் பொதுவாக்கெடுப்பு நாளை முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ஃபதா அல் சீசீ

எகிப்து அதிபராக முதல் முறையாக அல்-சிசி கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 97 விழுக்காடு வாக்குகள் பெற்று மீண்டும் அதிபரானார். இந்நிலையில், மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் தொடர்வது மற்றும் மேலும் ஆறு ஆண்டுகள் பதவியில் நீடிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

596 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 531 பேர் இந்த சட்டத்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும், பொதுமக்களின் கருத்து கேட்கும் வாக்கெடுப்பு நாளை முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட எகிப்தில் பொது வாக்கெடுப்பில் 55 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, இது தொடர்பான பரப்புரை மேற்கொள்ள போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details