தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தந்தை மகன் உள்ளிட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை! - son

கெய்ரோ: எகிப்தில் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை

By

Published : May 1, 2019, 11:57 AM IST

நியு கெய்ரோ நகரில் 2015ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய சோதனையில் தொழிலதிபரும், இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஹசான் மாலிக், அவரது மகன் ஹம்ஸா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எகிப்தில் பொருளாதார சரிவை ஏற்படுத்த திட்டம் தீட்டுதல், பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசப்பாதுகாப்பு அவசர நீதிமன்றம் ஏழு பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும் விதித்தது. அதே சமயம், இந்த வழக்கிலிருந்து 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details