காங்கோவில் 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து எபோலா காய்ச்சல் தீவிரமாக பிரவி வருகிறது.
காங்கோவில் பரவும் எபோலா காய்ச்சல் - 655 பேர் பலி - பலிஎண்ணிக்கை உயர்வு
கின்ஷாஷா: காங்கோவில் எபோலா காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது.
கின்ஷாஷா: காங்கோவில் எபோலா காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை 655ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018 ஜூலை மாதத்திலிருந்து பரவி வரும் எபோலா காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 655 பேர் அதிகரித்துள்ளதாகவும், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 91 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2014 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்ரிக்காவில் தீவிரமாகப் பரவிய எபோலோ காய்ச்சலுக்கு 11 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.