தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தங்க நகரத்தில் தீபாவளி கொண்டாட்டம்! - ஜோகன்னஸ்பர்க் மேயர் ஜெஃப் மகுபோ

ஜோகன்னஸ்பர்க்: இந்திய தூதர் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தூதர்கள், பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

eppa
eepavalideee

By

Published : Nov 15, 2020, 12:07 PM IST

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய தூதர் ரஞ்சன் ஏற்பாடு செய்த தீபாவளி விழா கொண்டாட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் பல தூதர்களும், பிரதிநிதிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

விழாவின் போது பேசிய ஜோகன்னஸ்பர்க் மேயர் ஜெஃப் மகுபோ, "கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு தீபாவளி திருவிழா பெரியளவில் நடத்தப்படவில்லை. வரலாற்று ரீதியாக, ஜோகன்னஸ்பர்க் 'ஒளியின் நகரம்' எனக் கூறப்படுகிறது

கிராமப்புறங்களில் இருந்து தங்கம் தேடும் புலம்பெயர்ந்தோர் நகரத்திற்கு வந்த போதெல்லாம், அவர்கள் ஜோகன்னஸ்பர்க்கை 'மபோனெங்' (செசோதோ மொழியில் ஒளியின் நகரம்) என்று குறிப்பிட்டன

"தீப விளக்குகளால் இருட்டை வென்றெடுப்பதில் ஜோகன்னஸ்பர்க் முதல் நகரமாக இருக்கிறது. கரோனா தொற்று பாதிப்பும் இன்னும் குறைந்தப்பாடில்லை. விரைவில் கரோனா தொற்றையும், போர் பதற்றத்தையும் நீக்கி நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், மேயர், இந்திய தூதர் ரஞ்சனுடன் சேர்ந்து, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரங்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details