ஜிம்பாப்வேவில் 'இடாய்' புயலின் காரணமாக வரலாறு காணாத அளவில் மழைபெய்து வருகிறது. இதுவரை 15 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 64 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேவை கடுமையாக தாக்கும் 'இடாய்' புயல் - ஜிம்பாவே
ஹராரே: ஜிம்பாப்வேயில் 'இடாய்' புயலால் கனமழை பெய்துவருகிறது. சாலையெங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உயிர்பலி அதிகரித்துள்ளது.
ஜிம்பாவேவை கடுமையாக தாக்கும் 'இடாய்' புயல்
இந்த கனமழையின் காரணமாக மொசாம்பிக் (mozambique) பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளின் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதில் 1,500-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கும் பணியில் அந்நாட்டு பேரிடர் மீட்புக்குழுஈடுபட்டுள்ளது.