தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2021, 3:30 PM IST

ETV Bharat / international

எலாய்ஸ் புயல் எதிரொலி: மொசாம்பிக்கில் 6 பேர் உயிரிழப்பு

மாபுடோ: எலாய்ஸ் புயல் தாக்கத்தால் மொசாம்பிக்கில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Cyclone Eloise
எலாய்ஸ் புயல்

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் வீசிய எலாய்ஸ் புயல் காரணமாக, பெய்த தொடர் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன.

கடந்தாண்டு மார்ச் மாதம் மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை மணிக்கு 177 கிலோ மீட்டர் வேகத்தில் இடாட் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது போலவே எலாய்ஸ் புயலும், மொசாம்பிக்கை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், 6 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெள்ளத்தால் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 8 ஆயிரத்து 800 வீடுகள் சேதமாகியுள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும், புயல் மற்றும் வெள்ளத்தால், லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் கடும் பனி: பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details