தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா அச்சுறுத்தல்: தென்னாப்பிரிக்காவில் முக்கிய கட்சிகளிடையே கருத்து மோதல் - தென்னாப்பிரிக்காவில் முக்கிய கட்சிகளிடையே கருத்து மோதல்

கேப் டவுன்: கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக விநியோகம் செய்யப்படும் முகக்கவசங்களில் அரசியல் கட்சிகளின் லோகோ அச்சிடப்பட்ட சம்பவம் அந்நாட்டு முக்கிய கட்சிகளிடையே கருத்த மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Corona
Corona

By

Published : Apr 18, 2020, 4:46 PM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்னாப்பிரிக்காவில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணியும் விலையில்லா முகக்கவசங்களை அளித்துவருகிறது. இதில், கட்சிகளின் லோகோ அச்சிடப்பட்டுதருவதாக ஆளும் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் ஏழை மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுவருவதாக ஜனநாயக கூட்டணி மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொற்று குறைந்துவரும்போதும், மற்ற நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 2,783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்களை ஏற்றிவரச் சீனா சென்றுள்ள ஏர் இந்தியா விமானம்!

ABOUT THE AUTHOR

...view details