உலகப் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பா, அமெரிக்க, ஆசிய கண்டங்களை வெகுவாக பாதித்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவில் இதன் தாக்கம் தற்போது தீவிரமடைந்துவருகிறது
உலக சுகாதார அமைப்பு ஆப்பிரிக்காவிலும் கரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்நாடு அவசர கால நடவடிக்கையில் இறங்கி தீவிரமாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தது. ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள் இந்த நோயை எதிர்கொள்ளும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெற்றிருக்கவில்லை என்பதால் ஆப்பிரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளவிவரப்படி இதுவரை 4 ஆயிரத்து 613 பேர் கரோனா பாதிப்பில் உள்ளதாகவும், 146 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.