ஐக்கிய நாடுகள் சபையின் கால நிலை மாநாடு ஸ்காட்லாந்தில் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக உலக வானிலை மையம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கால நிலை மாற்றம் குறித்து முக்கிய அறிக்கை அளித்துள்ளன.
இதில் ஆப்ரிக்க கண்டத்தில் நிலவும் கால நிலை மாற்ற சிக்கல் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அதில், உலக சராசரியை ஒப்பிடும் போது ஆப்ரிக்காவில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்துவருகிறது. இது 130 கோடி மக்களை அபாயத்தில் தள்ளியுள்ளது.