கடந்த வாரம் மெடல்லினில் அலுவலகம் ஒன்றுக்கு சென்ற தாய் அங்குள்ள நான்காவது தளத்தின் மின்தூக்கியில் (லிஃப்ட்) இருந்து வெளியேறினார். அப்போது தாய் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஓரிரு அடி முன்னே சென்ற குழந்தை ஆர்வத்தில் கீழே எட்டிப்பார்த்தது. ஆனால் அந்த தளத்தின் படிக்கட்டுகளில் தடுப்பு கம்பிகள் ஏதும் இல்லாததால், குழந்தை தலைகீழாக தவறி விழ நேர்ந்தது.
நொடியில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தாய்!
பொகோட்டா: கொலம்பியா நாட்டில் நான்காம் தளத்தில் இருந்து கீழே விழப்போன குழந்தையை அவரது தாய் கடைசி நொடியில் பாயந்து பிடித்து உயிரைக் காப்பாற்றும் காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
குழந்தையை காப்பாற்றும் தாய்
இதனையடுத்து குழந்தை கீழே விழுவதற்குள் தாய் பதறியடித்து தரையில் விழ இருந்த குழந்தையை தனது ஒரு கையால் பற்றிக் கொண்டார். இந்த விபத்தில் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. தற்போது இந்த காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.