தென் ஆப்ரிக்கா, ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள சேண்டானில் நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றில் அர்னால்டு கலந்துகொண்டார். தடகள வீரர்கள் சிலரிடம் தன் அனுபவங்கள் குறித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென எங்கிருந்தோ வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அர்னால்டு முதுகில் மிதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அடையாளம் தெரியாத நபரிடம் மிதிவாங்கிய அர்னால்டு? - அர்னால்டு தாக்கப்பட்டார்
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்னால்டு சுதாரிக்கும் முன்பே அவரது பாதுகாவலர்கள் அந்த அடையாளம் தெரியாத நபரை தூக்கி வெளியே வீசிவிட்டனர். அந்த வீடியோ காட்சியை அர்னால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அர்னால்டுக்கு என்ன ஆனதென அனைவரும் அக்கறையாய் விசாரிக்க, அவரோ அதை கலாய்த்திருக்கிறார். இது குறித்து அவர், உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் வருந்துவதற்கு இதில் எதுவுமில்லை. நான் கூட்ட நெரிசலால் தள்ளப்படுகிறேன் என நினைத்தேன். உங்களைப் போலவே வீடியோ பார்த்த பின்புதான் ஒருவர் என்னை மிதித்தது தெரியவந்தது என பதிவு செய்துள்ளார்.