தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

344 ஆண்டுகள் வாழ்ந்த ஆமையின் சொகுசு வாழ்க்கை நிறைவு... சோகத்தில் மக்கள்! - 344 years old tortoise died at Nigeria

அபுஜா: அரண்மனையில் 344 ஆண்டுகளாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த ஆமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

344 ஆண்டுகளாக சொகுசு வாழ்க்கை

By

Published : Oct 7, 2019, 2:35 PM IST

Updated : Oct 7, 2019, 3:22 PM IST

நைஜீரியாவில் அமைந்துள்ள ஒக்போமோசோ (Ogbomoso) அரண்மனையில் நீண்ட காலமாக "அலக்பா " என்ற ஆமை வாழ்ந்து வந்தது. ஆப்பிரிக்காவில் மிகவும் வயதான ஆமையாகக் கருதப்படும் "அலக்பா" ஆமையை 17ஆம் நூற்றாண்டில் ஒக்போமோசோ ராஜியத்தை ஆண்டுவந்த இசன் ஒகுமாய்டி (Isan Okumoyede ) என்ற மன்னர் அரண்மணக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து அலக்பா ஆமை அரண்மனையில் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து வந்தது. நைஜீரிய மக்கள் வாழ்க்கையில் பார்க்காத பல மன்னர்களையும் அலக்பா ஆமை பார்த்துள்ளது. இந்த ஆமை மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே உணவு உண்ணும் பழக்கமுடையது. ஆனாலும் ஆமைக்குத் தேவையானதைப் பார்த்துக் கொள்வதற்கு இரண்டு நபர்கள் தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

உலகம் முழுவதும் பல தரப்பு மக்கள் அலக்பா ஆமையை தினமும் பார்வையிட வருவார்கள். ஆமையிடம் மருத்துவ சக்தி இருந்ததாகவும், அதனால் தங்களின் நோய்கள் சரியானதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சொகுசாக வாழ்ந்துவந்த அலக்பா ஆமை இறந்துவிட்டதாக தற்போதைய மன்னர் ஜீமோ ஒய்வுன்மீ (Jimoh Oyewunmi) அறிவித்துள்ளார். இத்தகவல் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

344 ஆண்டுகளாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அலக்பா ஆமை

இச்சம்பவம் பற்றி கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், "ஆமைகள் சராசரியாக 80 முதல் 100 ஆண்டுகளும், சில அரிய ஆமைகள் 150 முதல் 200 ஆண்டுகளும் வாழும் தன்மை உடையன. ஆனால் அலக்பா ஆமை 344 ஆண்டுகள் வாழ்ந்திருப்பதாகக் கூறப்படுவது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர். இதற்கு முன்பு கொல்கத்தாவில் வாழ்ந்த 250 வயது அட்வைய்தா(Adwaita) ஆமைதான் உலகின் பழமையான ஆமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாசப் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 6 யானைகள்

Last Updated : Oct 7, 2019, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details