ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் கரோனா பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 21 லட்சத்து 87 ஆயிரத்து 417 பேர் அங்கு கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 83 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் அதிக அளவிலான பாதிப்புகள் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ளன. அங்கு ஏழு லட்சத்து 90 ஆயிரத்து 102-க்கும் மேற்பட்ட கரோனா பாதிப்புகளும், 21 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் அந்நாட்டில் இதுவரை நிகழ்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் மொராக்கோவும், மூன்றாவது இடத்தில் எகிப்தும் உள்ளன.
அதேவேளை மிகவும் பின்தங்கிய நாடான எத்தியோப்பியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கென்யா, நைஜீரிய உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிவருவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஆப்பிரிக்காவில் இரண்டாம் அலை ஏற்பட்டால் அது அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஆலோசித்துவருகின்றன.
இதையும் படிங்க:அரசியலில் நுழைந்தார் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரதமரின் இளைய மகள்